குறள்: 1018 102. நாணுடைமை

பொருட்பால்குடியியல்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து

மு. வரதராசனார் உரை

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

மு. கருணாநிதி உரை

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

நாணுடைமை அதிகாரம் முழுவதும்