102. நாணுடைமை

மாந்தர்க்குரிய நற்பண்புகளில் ஒன்றாக நாணுடைமையைக் கருதுகிறார் வள்ளுவர். செய்யத் தகாத இழி செயல்களுக்கும், பழி செயல்களுக்கும் கூச்சப்படுவது நாண் ஆகும். வள்ளுவர் இலக்கியலான நிறைமாந்தரை சான்றோர் என அழைப்பார். நாணுடைமை அதிகாரம் பழியுண்டாக்கும் செயல்களுக்கு வெட்கப்படுதலைச் சொல்வது.