குறள்: 1026 103. குடிசெயல் வகை

பொருட்பால்குடியியல்

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

மு. கருணாநிதி உரை

நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்

குடிசெயல் வகை அதிகாரம் முழுவதும்