குறள்: 1038 104. உழவு

பொருட்பால்குடியியல்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு

மு. வரதராசனார் உரை

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

மு. கருணாநிதி உரை

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது

உழவு அதிகாரம் முழுவதும்