குறள்: 1040 104. உழவு

பொருட்பால்குடியியல்

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்

மு. வரதராசனார் உரை

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா உரை

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

மு. கருணாநிதி உரை

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்

உழவு அதிகாரம் முழுவதும்