குறள்: 1043 105. நல்குரவு

பொருட்பால்குடியியல்

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசை

மு. வரதராசனார் உரை

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

மு. கருணாநிதி உரை

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்

நல்குரவு அதிகாரம் முழுவதும்