105. நல்குரவு

நுகரப்படுவன எவையும் இல்லாத நிலை நல்குரவு எனப்படும். இது வறுமை என்று அறியப்படுவதுமாம். இதனை நல்குரவு, இன்மை, நிரப்பு என்னும் சொற்களாலும் இவ்வதிகாரப்பாடல்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். வறுமையைப்பற்றியும் பசிக்கொடுமையால் வாடுவோர் பற்றியும் படிப்போர் நெஞ்சம் பதறும் மொழியில் சொல்லோவியங்களாக இங்கு அவர் தீட்டிக் காட்டியுள்ளார் அவர். வறுமைப்பட்டார் நுகர்ச்சியைத் துறந்து முயன்று நல்வாழ்வைப் பெறவேண்டும் என்ற குறிப்புடன் அதிகாரம் நிறைவுறுகிறது.