குறள்: 1045 105. நல்குரவு

பொருட்பால்குடியியல்

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்

மு. வரதராசனார் உரை

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை

இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

மு. கருணாநிதி உரை

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

நல்குரவு அதிகாரம் முழுவதும்