குறள்: 1051 106. இரவு
மு. வரதராசனார் உரை
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
இரவு என்பது இன்மைநிலையில் பிறரிடம் ஒன்றினை வேண்டுதலைக் குறிப்பது. மற்றவரிடம் ஏற்று வாழ்வது ஏற்புடையது அல்ல. ஆனாலும் என்ன முயன்றும் நுகரப்படுவன எதுவுமே இல்லை என்ற வேளை வரும்போது வறியவன் என் செய்வான்? அப்பொழுது, அவன் உயிர் நீப்பதைத் தவிர்க்க, கரப்பில்லாரிடம் அதாவது தம்மிடம் உள்ளதை மறைக்காமல் கொடுப்பவரிடம் இரக்கலாம் என்கிறார் வள்ளுவர். மானத்திற்குக் கேடு வராத ஏற்பு இரவாகாது என்ற வகையிலே இவ்வதிகாரத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அதிகாரம் 'இரவு' என்று, தலைப்புக் கொண்டிருந்தாலும் இது கரப்பின்றி ஈவார் பற்றியே பெரிதும் பேசுகின்றது. தம்மிடம் இருப்பதை மறைத்தல் பெரும்பழி என்பது மிகுதியும் வலியுறுத்தப்படுகிறது. இரப்பாரும் உலகத்துக்கு வேண்டும் என்று சொல்லும் பாடல்களும் இதனுள்ளே உள.
குறள்: 1051 106. இரவு
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
குறள்: 1052 106. இரவு
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
குறள்: 1053 106. இரவு
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
குறள்: 1054 106. இரவு
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
குறள்: 1055 106. இரவு
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
குறள்: 1056 106. இரவு
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
குறள்: 1057 106. இரவு
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
குறள்: 1058 106. இரவு
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
குறள்: 1059 106. இரவு
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
குறள்: 1060 106. இரவு
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.