குறள்: 1056 106. இரவு
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்
மு. வரதராசனார் உரை
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
மு. கருணாநிதி உரை
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்