குறள்: 1053 106. இரவு

பொருட்பால்குடியியல்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்து

மு. வரதராசனார் உரை

ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

மு. கருணாநிதி உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்

இரவு அதிகாரம் முழுவதும்