குறள்: 1063 107. இரவச்சம்

பொருட்பால்குடியியல்

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்

மு. வரதராசனார் உரை

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை

இரவச்சம் அதிகாரம் முழுவதும்