குறள்: 1077 108. கயமை

பொருட்பால்குடியியல்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்கு

மு. வரதராசனார் உரை

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

மு. கருணாநிதி உரை

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்

கயமை அதிகாரம் முழுவதும்