குறள்: 1071 108. கயமை
மு. வரதராசனார் உரை
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
கயம் என்பது தானாக உருவாகக்கூடிய நீர் நிலை, சுனை , மென்மை, பெருமை என்பதாக பொருள் தரும்.கயமை என்பது தன் உயர்வை தானே அறிதல் எனும் பொருட்டு மக்களாட்சியில் தனி மனித வாழும் உரிமை எனப்பட்டது.வேதம், கல்வி இவற்றில் உயர் நிலை பெறாதவர் பகுத்தறிந்து வாழும் கலை உணர்தல் கயமை எனப்பட்டது.இதில் தீங்கு இல்லை.கயவர் என்பார் கீழ் மக்கள் இல்லை.மனித குலத்தின் ஒரு பிரிவினர்.தன் உயர்வை தானே தீர்மானிக்கும் சுய நிர்ணயத்தன்மைக்கு அடிப்படை என கொள்ளலாம்.இம்மக்களை அடிப்படையாக வைத்தே ஜனநாயகம் உருவானது.தன் மதிப்பு, சுய கவுரவம், சிந்தனை கருத்து சுதந்திரம், தனி மனித வாழும் உரிமை இல்லாத நிலையில் அரசின்மையாய் இன்று சமூக சீர்கேடுகளை சந்திக்கிறது.இந்நிலைக்கு முக்கிய காரணம் சந்தர்ப்பங்களில் சம உரிமை என்னும் கொள்கை எல்லோரும் சமம் என்ற சீருடமையானதே, ஒதுக்கீடு என முன்னுரிமை பெற்றதே தவிர சம உரிமை பயனாகியிருந்தால் ஜனநாயகம் நடைமுறைப்படுத்துவது எளிது.எல்லோருக்கும் உயர்வு என்னும் முற்போக்கு நிலை எளிதில் ஒத்துழைப்பை பெற்றுத்தரும்.போராடி வெல்வதை விட ஒத்துழைப்பில் கிடைக்கும் நிகர் அதிகம் என்பதை நிறுவுதல் எளிது.
குறள்: 1071 108. கயமை
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
குறள்: 1072 108. கயமை
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
குறள்: 1073 108. கயமை
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
குறள்: 1074 108. கயமை
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
குறள்: 1075 108. கயமை
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
குறள்: 1076 108. கயமை
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.
குறள்: 1077 108. கயமை
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
குறள்: 1078 108. கயமை
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
குறள்: 1079 108. கயமை
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
குறள்: 1080 108. கயமை
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.