குறள்: 1080 108. கயமை

பொருட்பால்குடியியல்

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்து

மு. வரதராசனார் உரை

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?

மு. கருணாநிதி உரை

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்

கயமை அதிகாரம் முழுவதும்