குறள்: 1081 109. தகை அணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு
மு. வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா உரை
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
மு. கருணாநிதி உரை
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்