குறள்: 1081 109. தகை அணங்குறுத்தல்
மு. வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
தலைவன் தலைவியை முதன் முதலில் எதிர்கொள்வதைச் சொல்லும் அதிகாரம். வேறு வேறு இடத்தில் வெவ்வேறு சூழலில் பிறந்து தோன்றிய ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இயற்கை நியதியால் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் காண நேரிடுகிறது. அவளைப் பார்த்த பொழுதே ஒர் மின்னலைப் போன்று அவனுள்ளத்தில் காதல் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. முதல் காட்சியிலேயே அவளது அழகும் பண்புநலன்களும் தன்னை மிகையாகத் தாக்கியதாக அவன் உணர்கிறான். முதலில் அவளை அழகுத் தெய்வமாகக் கண்டு பின் காதலுக்குரியவளாகக் கருதுகிறான்.
குறள்: 1081 109. தகை அணங்குறுத்தல்
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
குறள்: 1082 109. தகை அணங்குறுத்தல்
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
குறள்: 1083 109. தகை அணங்குறுத்தல்
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது
குறள்: 1084 109. தகை அணங்குறுத்தல்
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
குறள்: 1085 109. தகை அணங்குறுத்தல்
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
குறள்: 1086 109. தகை அணங்குறுத்தல்
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
குறள்: 1087 109. தகை அணங்குறுத்தல்
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
குறள்: 1088 109. தகை அணங்குறுத்தல்
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
குறள்: 1089 109. தகை அணங்குறுத்தல்
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
குறள்: 1090 109. தகை அணங்குறுத்தல்
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.