குறள்: 1086 109. தகை அணங்குறுத்தல்

காமத்துப்பால்களவியல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்னிவள் கண்

மு. வரதராசனார் உரை

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை

அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

மு. கருணாநிதி உரை

புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா

தகை அணங்குறுத்தல் அதிகாரம் முழுவதும்