குறள்: 1090 109. தகை அணங்குறுத்தல்
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று
மு. வரதராசனார் உரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
சாலமன் பாப்பையா உரை
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
மு. கருணாநிதி உரை
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்