குறள்: 1088 109. தகை அணங்குறுத்தல்

காமத்துப்பால்களவியல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு

மு. வரதராசனார் உரை

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

சாலமன் பாப்பையா உரை

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

மு. கருணாநிதி உரை

களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!

தகை அணங்குறுத்தல் அதிகாரம் முழுவதும்