குறள்: 1117 112. நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால்களவியல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து

மு. வரதராசனார் உரை

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா உரை

நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

மு. கருணாநிதி உரை

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

நலம் புனைந்து உரைத்தல் அதிகாரம் முழுவதும்