குறள்: 1118 112. நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால்களவியல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி

மு. வரதராசனார் உரை

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா உரை

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

மு. கருணாநிதி உரை

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

நலம் புனைந்து உரைத்தல் அதிகாரம் முழுவதும்