குறள்: 1126 113. காதற் சிறப்புரைத்தல்

காமத்துப்பால்களவியல்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியர்எம் காத லவர்

மு. வரதராசனார் உரை

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

சாலமன் பாப்பையா உரை

என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

மு. கருணாநிதி உரை

காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்

காதற் சிறப்புரைத்தல் அதிகாரம் முழுவதும்