குறள்: 1127 113. காதற் சிறப்புரைத்தல்

காமத்துப்பால்களவியல்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்து

மு. வரதராசனார் உரை

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

சாலமன் பாப்பையா உரை

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

மு. கருணாநிதி உரை

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

காதற் சிறப்புரைத்தல் அதிகாரம் முழுவதும்