குறள்: 1142 115. அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால்களவியல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்

மு. வரதராசனார் உரை

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

மு. கருணாநிதி உரை

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது

அலர் அறிவுறுத்தல் அதிகாரம் முழுவதும்