குறள்: 1141 115. அலர் அறிவுறுத்தல்
மு. வரதராசனார் உரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
காதலர்களின் மறைவொழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து அலராகப் பரவியது. அலர்என்பது காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு நாணத்தைத் துறந்தவர்களாக இருப்பதை ஊரார் பேசுவது. அலரறிவுறுத்தல் என்பது அப்படி ஊர் பேசுவதைக் காதலர்களுக்குத் தெரிவிப்பது. காமத்துக்கு எதிராகப் பேசப்படும் கௌவை இவர்கள் காதலை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. அலரே தங்கள் காதலை இணைக்கப் போவது என்று காதலர் உள்ளூர மகிழவும் செய்கிறார்கள். அலர் நன்மை செய்ய வந்தது என்றெண்ணினர். அதுவே பின்வரும் இணைந்து வாழும் மண வாழ்க்கைக்கு வழி வகுத்தது என்ற குறிப்புடன் அதிகாரம் முடிகிறது.
குறள்: 1141 115. அலர் அறிவுறுத்தல்
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
குறள்: 1142 115. அலர் அறிவுறுத்தல்
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
குறள்: 1143 115. அலர் அறிவுறுத்தல்
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
குறள்: 1144 115. அலர் அறிவுறுத்தல்
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
குறள்: 1145 115. அலர் அறிவுறுத்தல்
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
குறள்: 1146 115. அலர் அறிவுறுத்தல்
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
குறள்: 1147 115. அலர் அறிவுறுத்தல்
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
குறள்: 1148 115. அலர் அறிவுறுத்தல்
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
குறள்: 1149 115. அலர் அறிவுறுத்தல்
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
குறள்: 1150 115. அலர் அறிவுறுத்தல்
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.