குறள்: 1147 115. அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால்களவியல்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்

மு. வரதராசனார் உரை

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

மு. கருணாநிதி உரை

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது

அலர் அறிவுறுத்தல் அதிகாரம் முழுவதும்