குறள்: 1148 115. அலர் அறிவுறுத்தல்

காமத்துப்பால்களவியல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்காமம் நுதுப்பேம் எனல்

மு. வரதராசனார் உரை

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

மு. கருணாநிதி உரை

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்

அலர் அறிவுறுத்தல் அதிகாரம் முழுவதும்