குறள்: 1151 116. பிரிவு ஆற்றாமை
மு. வரதராசனார் உரை
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
இல்வாழ்க்கையில் கணவனும் மனைவியாக நிலத்தொடு நீரியைந்தன்ன ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள். அதுபொழுது தொழில்முறை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு செல்ல வேண்டுமாதலால் பிரிவுக்காலமும் நெடிது ஆகிறது. தலைவிக்குப் பிரிவு தாங்கமுடியாததாகி விடுகிறது. பிரிவு இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தும், காதல் கொண்டவரக்குப் பிரிவு நிகழும்பொழுது, ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்கிறாள் தலைவி.
குறள்: 1151 116. பிரிவு ஆற்றாமை
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
குறள்: 1152 116. பிரிவு ஆற்றாமை
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.
குறள்: 1153 116. பிரிவு ஆற்றாமை
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
குறள்: 1154 116. பிரிவு ஆற்றாமை
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
குறள்: 1155 116. பிரிவு ஆற்றாமை
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
குறள்: 1156 116. பிரிவு ஆற்றாமை
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
குறள்: 1157 116. பிரிவு ஆற்றாமை
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
குறள்: 1158 116. பிரிவு ஆற்றாமை
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
குறள்: 1159 116. பிரிவு ஆற்றாமை
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
குறள்: 1160 116. பிரிவு ஆற்றாமை
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.