குறள்: 1158 116. பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால்கற்பியல்

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு

மு. வரதராசனார் உரை

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

மு. கருணாநிதி உரை

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது

பிரிவு ஆற்றாமை அதிகாரம் முழுவதும்