குறள்: 1153 116. பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால்கற்பியல்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்

மு. வரதராசனார் உரை

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா உரை

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

மு. கருணாநிதி உரை

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

பிரிவு ஆற்றாமை அதிகாரம் முழுவதும்