குறள்: 1161 117. படர்மெலிந் திரங்கல்

காமத்துப்பால்கற்பியல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும்

மு. வரதராசனார் உரை

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

மு. கருணாநிதி உரை

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

படர்மெலிந் திரங்கல் அதிகாரம் முழுவதும்