குறள்: 1162 117. படர்மெலிந் திரங்கல்
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்
மு. வரதராசனார் உரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
சாலமன் பாப்பையா உரை
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
மு. கருணாநிதி உரை
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை