குறள்: 1165 117. படர்மெலிந் திரங்கல்
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்
மு. வரதராசனார் உரை
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
சாலமன் பாப்பையா உரை
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?
மு. கருணாநிதி உரை
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?