குறள்: 1166 117. படர்மெலிந் திரங்கல்
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது
மு. வரதராசனார் உரை
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
சாலமன் பாப்பையா உரை
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
மு. கருணாநிதி உரை
காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது