குறள்: 1173 118. கண் விதுப்பழிதல்

காமத்துப்பால்கற்பியல்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து

மு. வரதராசனார் உரை

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

மு. கருணாநிதி உரை

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

கண் விதுப்பழிதல் அதிகாரம் முழுவதும்