118. கண் விதுப்பழிதல்

தலைவியின் கண்கள் காதலரைக் காணும் விருப்பம் மேம்பட்டு விரைதலைக் குறிப்பது விதும்பலாகும். அவரைக் காட்டியவை அவளது கண்கள்தாம். இப்பொழுது உறக்கமின்மையாலும் அழுகையை அடக்கமாட்டாமையாலும் ஊரறியப் பிரிவின் துன்பத்தைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதும் அவைதாம். .தலைவியின் கண்களின் நலம் குறைவதையும் தலைவனைக் காண்டற்கு விரைதலையும் விளக்குகிறது இவ்வதிகாரம்.