குறள்: 1176 118. கண் விதுப்பழிதல்

காமத்துப்பால்கற்பியல்

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது

மு. வரதராசனார் உரை

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

மு. கருணாநிதி உரை

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

கண் விதுப்பழிதல் அதிகாரம் முழுவதும்