குறள்: 1175 118. கண் விதுப்பழிதல்
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்காமநோய் செய்தவென் கண்
மு. வரதராசனார் உரை
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
சாலமன் பாப்பையா உரை
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
மு. கருணாநிதி உரை
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன