119. பசப்புறு பருவரல்

பசலை என்பது பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய் என்று சொல்லப்படுகிறது. காதலர் பிரிவால் உணவு,உறக்கம் செல்லாது அவரையே சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஏற்படுவது பசலை நோய் பசப்பு என்றும் அறியப்படும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் உடல் மெலிந்து அழுது அழுது, கண் சோர்ந்து போயுள்ள தலைவியினது. தோலின் இயற்கையான நிறம் மாற்றம் அடைந்ததைக் குறிப்பது பசலையாகும்; நிறவேறுபாட்டாலும் தன் மேனியழகு குறைந்தது கண்டு மேலும் வருத்தம் அடைகிறாள் தலைவி. இதுபற்றி[ பேசும் அதிகாரம் பசப்புறு பருவரல். பருவரல் என்ற சொல்லுக்கு வருத்தம் என்று பொருள்