குறள்: 1184 119. பசப்புறு பருவரல்

காமத்துப்பால்கற்பியல்

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு

மு. வரதராசனார் உரை

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

சாலமன் பாப்பையா உரை

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

மு. கருணாநிதி உரை

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

பசப்புறு பருவரல் அதிகாரம் முழுவதும்