120. தனிப்படர் மிகுதி

ஒரு செயல்நோக்கம் கருதித் தலைவன் பிரிந்தபின் உண்டான தனிமையில் தலைவிக்கு வந்த துன்பமிகுதியைக் கூறும் அதிகாரம். தான் பிரிவுத்துயர் தாங்காது வருந்துவதுபோல் தலைவனும் வருந்துவார் என்று தலைவி எண்ணுகிறாள். அதுசமயம் உலகத்துக் கணவன்-மனைவி உறவு பற்றி நினைக்கிறாள். மனம் ஒத்தவர்கள், ஒருதலையாய்க் காதல் கொண்டவர்கள் என்னும் இவர்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தில் எழுகின்றன.