குறள்: 1199 120. தனிப்படர் மிகுதி

காமத்துப்பால்கற்பியல்

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டிசையும் இனிய செவிக்கு

மு. வரதராசனார் உரை

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

மு. கருணாநிதி உரை

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்

தனிப்படர் மிகுதி அதிகாரம் முழுவதும்