குறள்: 1180 118. கண் விதுப்பழிதல்

காமத்துப்பால்கற்பியல்

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து

மு. வரதராசனார் உரை

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா உரை

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

மு. கருணாநிதி உரை

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல

கண் விதுப்பழிதல் அதிகாரம் முழுவதும்