குறள்: 119 12. நடுவு நிலைமை

அறத்துப்பால்இல்லறவியல்

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்

மு. வரதராசனார் உரை

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

சாலமன் பாப்பையா உரை

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

மு. கருணாநிதி உரை

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

நடுவு நிலைமை அதிகாரம் முழுவதும்