குறள்: 1202 121. நினைந்தவர் புலம்பல்

காமத்துப்பால்கற்பியல்

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்

மு. வரதராசனார் உரை

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

மு. கருணாநிதி உரை

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்

நினைந்தவர் புலம்பல் அதிகாரம் முழுவதும்