குறள்: 1203 121. நினைந்தவர் புலம்பல்

காமத்துப்பால்கற்பியல்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்

மு. வரதராசனார் உரை

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

சாலமன் பாப்பையா உரை

எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

மு. கருணாநிதி உரை

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

நினைந்தவர் புலம்பல் அதிகாரம் முழுவதும்