குறள்: 1204 121. நினைந்தவர் புலம்பல்
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்
மு. வரதராசனார் உரை
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
மு. கருணாநிதி உரை
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?