குறள்: 1205 121. நினைந்தவர் புலம்பல்

காமத்துப்பால்கற்பியல்

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்

மு. வரதராசனார் உரை

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

சாலமன் பாப்பையா உரை

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

மு. கருணாநிதி உரை

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

நினைந்தவர் புலம்பல் அதிகாரம் முழுவதும்