குறள்: 1215 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது

மு. வரதராசனார் உரை

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை

முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

மு. கருணாநிதி உரை

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்